search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணி நிர்வாகம்"

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் நோக்கத்தில், வீரர்கள் குடும்பத்தை விட்டு விலகியிருங்கள் என அணி நிர்வாகம் அட்வைஸ் செய்துள்ளது. #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அயர்லாந்துடன் இரண்டு டி20, இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது.

    ஆகஸ்ட் 1-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்திய வீரர்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் இங்கிலாந்தில் விளையாடுகிறார்கள். இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ் மேலும் சிலர் தங்களது மனைவி, காதலிகள், குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களுடன் பொழுது போக்கி வருகிறார்கள்.

    டி20, ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. நாளை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் செல்ம்ஸ்ஃபோர்டில் நடக்கிறது.



    முந்தைய காலக்கட்டத்தில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடும்போது வீரர்கள் தங்களது குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது தொடரில் மோசமான தோல்வியை சந்திக்கும்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டனர்.

    அதேபோல் தற்போது நடந்து விடக்கூடாது என்பதற்காக 3-வது டெஸ்ட் முடியும் வரை வீரர்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டு தள்ளியிருங்கள் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி முடிவடைகிறது.
    ×